காத்திருக்கையில்…
உன் ஆடைகள் யாவும் எனக்கு அத்துப்படி!
ஆயினும் உனக்காக கோவிலில் காத்திருக்கையில்
காணும் எல்லா உடைகளிலும்
உனைப் பொருத்திப் பார்த்து
ஏமாந்து போகிறேன்.
கண நேரம் கண நேரம் என
மணி நேரம் போன பின்னும்
என் மனம் சொல்கிறது
அதோ அங்கே தெரியும்
பர்தாவுக்குள் ஒருவேளை நீயா?
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது பகுக்கப்படாதது | குறிச்சொற்கள்: கவிதைகள்

