தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தலைசிறந்த பத்து வசனங்கள்…

தமிழ் திரைப்படம் பேசத்தொடங்கி 50 ஆண்டுகளுகும் மேலாகிவிட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தலைசிறந்த 10 வசனங்களை வெளியிட்டு உள்ளது.. அதன்படி முதல் பத்து இடங்களை பிடித்த வசனங்கள் கீழிருந்து மேலாக…

10) மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரணதேவி… பி.எஸ்.வீரப்பா…. மஹாதேவி

9) சபாஷ் சரியான போட்டி…. பி.எஸ்.வீரப்பா…. வஞ்சிக்கோட்டை வாலிபன்.

 8) நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!… ஏ.பி.நாகராஜன்…திருவிளையாடல்.

7) நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு…சிவாஜி கணேசன்… வியட்நாம் வீடு.

6) பத்தவச்சுட்டியே பரட்டை…. கவுண்டமணி…16 வயதினிலே.

5) நீங்க நல்லவரா கெட்டவரா?… குழந்தை… நாயகன்.

4) ஆத்தா ஆடு வளத்துச்சு கோழி வளத்துச்சு ஆனா நாய் மட்டும் வளக்கலை! அதுக்கு பதிலா என்னயதான வளத்துச்சு!…. கமலஹாசன்….. 16 வயதினிலே.

3) மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை… விஜயகாந்த்… ரமணா.

2) மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு… வடிவேலு… சந்திரமுகி..

முதல் இடத்தில் உள்ள வசனம் என்ன என்று கண்டுபிடித்து எனக்கு அனுப்புங்க பார்க்கலாம்… 

2 பதில்கள்

  1. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி ! – பாட்ஷா – இதுவா?

    வரி வட்டி கிஸ்தி.. எதற்கு கேட்கிறாய் வட்டி etc.. etc… – கட்டபொம்மன் – இதுவா?

    ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் – பராசக்தி

    இன்னும் நிறைய இருக்கு :)

  2. தல கலக்கிட்டியே! முதல்ல சொன்னதுதான் ஒன்னாம் இடத்தை பிடிச்ச பாட்ஷா பட வசனம். மத்ததெல்லாம் அதுக்கப்புரம்தான்.

    நன்றி ‘சிரி’காந்த்

    அடிக்கடி பதிவிற்க்கு வந்து செல்லவும்.

மறுமொழி இடுக