தமிழில் TOEFL இப்படித்தான் இருக்குமோ?..

இன்று காலை எனக்கு நண்பர் கோம்பை சரவணன் அனுப்பிய மின்னஞ்சல் மிகவும் சுவையாக இருந்தது!  நீங்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம், எல்லோரும் தயார்தானே, இந்த TOTML( Test of Tamil as a Madras Language) தேர்வின் விடைகளை பின்னூட்டத்தில் இடவும்.
தயாரா?  ”ஜூட்”
1) “குஜிலி” யுடன் நீங்கள் செய்வது?
அ) குஜால்ஸ் ஆ) கில்மா இ) கில்பான்ஸ் ஈ) கலீஜ்
2) ”ஜூஜுபி” என்றால் என்ன?
அ) ஒரு இனிப்பு பலகாரம் ஆ) மிகவும் சுலபமானது இ) மிகவும் கடினமானது ஈ) ஒரு வகை “அல்வா”
3) “அல்வா” என்றால் என்ன?
அ) திருநெல்வேலியில் காணப்படுவது ஆ) ஒரு பெண் தோழி வேறொருவரை மணந்துகொள்ளும் போது தன் ஆண் நண்பருக்கு கொடுப்பது [...]