தமிழில் TOEFL இப்படித்தான் இருக்குமோ?..

இன்று காலை எனக்கு நண்பர் கோம்பை சரவணன் அனுப்பிய மின்னஞ்சல் மிகவும் சுவையாக இருந்தது!  நீங்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம், எல்லோரும் தயார்தானே, இந்த TOTML( Test of Tamil as a Madras Language) தேர்வின் விடைகளை பின்னூட்டத்தில் இடவும்.

தயாரா?  ”ஜூட்”

1) “குஜிலி” யுடன் நீங்கள் செய்வது?

அ) குஜால்ஸ் ஆ) கில்மா இ) கில்பான்ஸ் ஈ) கலீஜ்

2) ”ஜூஜுபி” என்றால் என்ன?

அ) ஒரு இனிப்பு பலகாரம் ஆ) மிகவும் சுலபமானது இ) மிகவும் கடினமானது ஈ) ஒரு வகை “அல்வா”

3) “அல்வா” என்றால் என்ன?

அ) திருநெல்வேலியில் காணப்படுவது ஆ) ஒரு பெண் தோழி வேறொருவரை மணந்துகொள்ளும் போது தன் ஆண் நண்பருக்கு கொடுப்பது இ) ஒரு வகையான லட்டு. ஈ) ஒரு தாவரம்.

4) ஒரு நண்பரை மரியாதையாக விளிக்கும் (அழைக்கும்) முறை!

அ) மச்சி ஆ) சார் இ) அவர் பெயரைச் சொல்லி ஈ) ஐயா.

5) “ஃப்ரூட்டி” என்றால் என்ன?

அ) நிறைய படித்தவர் ஆ) விளையாட்டு வீரர் இ) பேராசிரியர் ஈ) ஒரு வகை குளிர் பானம்.

6) யாரேனும் “நம்பிட்டேன்” என்று சொன்னால் அதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்வது என்ன?

அ) நான் உன்னை நம்பவில்லை ஆ) நிச்சயமாக, நான்  உன்னை நம்புகிறேன். இ) லூசாப்பா நீ? ஈ) எனக்கு பஸ்சுக்கு நேரமாச்சு.

7) பீட்டர் என்பது யார்? அல்லது என்ன?

அ) ஒரு சுற்றுலா பயணி  ஆ) தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேசுபவர். இ) தமிழில் மட்டுமே பேசுபவர் ஈ) உங்கள் ஆசிரியர்.  

 8) ” கும்பலோடு கோவிந்தா” என்ற பதம் பின்வரும் எந்த நிகழ்வோடு தொடர்புடையது?

அ) நீங்கள் கும்பலாக  திருப்பதி செல்வது ஆ) கும்பலாக “பலான” படம் பார்க்கும் போது கையும் களவுமாக பிடிபடுவது இ) குழுவாக சேர்ந்து படிப்பது. ஈ) குழுவோடு சேர்ந்து ஒரு இந்தி நடிகரை பார்க்கச் செல்வது.

9) “ரப்சர்” என்றால் என்ன?

அ) கடி பார்ட்டி ஆ) திராபை இ) பிரச்சனை ஈ) பயங்கரமான பார்ட்டி

10) ஒருவர் ஒரு பெண்ணைப்பார்த்து ” சரியான கட்டை” என்று கூறினால் அதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்வது ?

அ) அவள் ஒரு அறிவாளி ஆ) அவள் ஒல்லியான பெண் இ) எல்லோர் கண்களையும் கவரும் பெண்  ஈ) கட்டைச்செருப்பு அணிந்த பெண்.

பதில்களை பின்னூட்டமிடுங்கள்… மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளிய்டப்படும்.

நல்ல “தமிழ் மகனை” அடையாளம் காண்போம்.

8 பதில்கள்

  1. machi idu romba overa theriyalaya
    this is two much i say

  2. nalla karpanai…nan pudidaga wordpressil tamil blog ondru arambika virumbugiren..anal ennal tamil mozhiyil type seiya mudiyavillai.nan ethai adithalum englighilthan varugirathu. neengal enaku ungal blogil eppadi tamil mozhiil ezhuthugireergal endru solla mudiyuma?? nandri.

  3. dear sankum,

    first download ekalappai from tamizha.com then use ekalappai for tamil fonts..

  4. 1.a , 2.e, 3.a, 4.a, 5.a, 6.a, 7.b, 8. b ,9.a, 10. c.

  5. உங்களோட வளமான கற்பனைத்திறனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

  6. மிக்க நன்றி நிவே,
    அடிக்கடி பதிவிற்க்கு வந்து செல்லவும்.

  7. 1-அ,2-ஆ,3-ஆ,4-அ,5-அ,6-அ,7-ஆ,8-ஆ,9-இ,10-இ,

  8. அன்புள்ள புலி,

    உங்கள் வருகைக்கு நன்றி, எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லியதால் “தமிழ்ப்புலிகேசி” என்று இனிமேல் எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவாய்..

மறுமொழி இடுக