மலர் பிறந்தநாள்…

இன்றலர்ந்த என் மலரே

மல்லிகையின் மென்மலரே

சொல்லாமல் என்நெஞ்சில்

தேன் சொரிந்த ஜெயமலரே..

நீ பிறந்த இந்நாள் தான்

என் வாழ்வின் பொன்னாளா..

சொல்லாத வாழ்த்தெல்லாம்

சொல்கின்றேன் இந்நாளில்..

இல்லாத இன்பமெல்லாம்

பொங்கிவரும் நன்னாளில்

வளம் பெருக புகழ் பெருக

இன்றுபோல் என்றும்

என் தோழியாய்

பல்லாண்டு வாழ வாழ்த்தும்..

அன்பு..

உதயா…உதயா..உதயா..

baby11

மறுமொழி இடுக