நேற்றுதான் பழகியதாய் நெஞ்சுக்குள் நினைவு
ஓராண்டு ஓடிவிட்டது இமைப்பொழுதில்..
எத்தனை பரிமாறல்கள்.. எத்தனை சண்டைகள்..
அத்தனையும் இனிமையாய் மனதில் ..
எல்லாம் கூடிவிட்டன அதற்குள்
எனக்குள் நினைவுகளும் .. உனக்கொரு வயதும்..
எல்லாம் மாறிவிட்டன இங்கே..
இரவின் நீட்சி..
பகலின் மாட்சி..
கடலலை வேகம்
கடற்கரை மோகம்
விழியோர ஈரம்
விளையாட்டு நேரம்
தினந்தோறும் உணவு
திகட்டும் கனவு
உறவின் பாசம்
நட்பின் நேசம்
பயணித்த திசை
பழகிய இசை
கலையின் நாட்டம்
கவிதை ஓட்டம்
வாழ்க்கை முறை
வாழ்ந்த அறை
பொழுது போக்கு
செல்வாக்கு
என எல்லாம் மாறிவிட்டது
எப்போதும் மாறாமல் என்னோடு வாழ்கிறது
என் அன்பு தோழி உன் நட்பு…
ஆயிரம் உண்டிங்கு மோதல்
ஆனாலும் நம் நட்பில் காதல்
எப்போதும் குறையாது என் அன்பு பெண்ணே
நீ வாழ்க பல்லாண்டு என் அருமை கண்ணே!!
அன்பு..
உதயா..உதயா..உதயா..
Happy birthday mom— rasberry
Filed under: நட்பு....



Ovvoru Piranthanaalkum Ippedi Oru KAVITHAI Ningal Enaku Tharuvathu Endral, 365 NAATKALUM Enaku Pirantha Naalage Iruka Vendum Endru Manam PERASAI Kolgirathu…
Ungal Natpuku Koodi Nandri Sonnalum Migai Aagathu Udayarr! Aagayaal Aayiram Thamaraigalai Samarpirkindren Ungal Paathangkalil…..
Anbudan,
JAYAMALAR
ungal anbaana malalai kavitailen manam eangukinrathu un natpin uravaaga vendum enru……………