என் அன்பு மலர்
எனதாசை மலர்
உயிர் மலர்
என் ஜெயமலர்..
பூக்கும் நறுமலர்செண்டு
புதிதாய் பிறந்தாள் இன்று
துணையாய் வருவாள் என்று
காதல் சொன்னேன் அன்று !
பூவை பிறந்த இந்நாள்
பூக்கள் பிறந்த நன்னாள்
பூவைத்தே இப்பாவை
மோட்சம் செய்தாள் பூவை!
கூந்தல்
பூ விரியும் பந்தல்
உன் தோள் சரியும் கூந்தல் !
நுதல்
தலை குனிந்த பிறையோ
பொட்டிட்ட உன் நுதலோ!
புருவம்
விழி காக்கும் குடையோ
வேல் கொண்ட படையோ !
விழிகள்
விழியில் ஒளி வீசும்
பாவை மொழி பேசும்!
நாசி
எடுப்பாய் அமைந்த நாசி
அது குடைமிளகா நாசி
கன்னம்
சந்தனம் வைத்த கிண்ணம்
பூசி மெழுகிய கன்னம்
இதழ்
சிவந்து மின்னும் தேன்மதுரம்
மதுவை சுரக்கும் உன்அதரம்!
முகம்
நிலவாய் ஒளிரும் உன்முகம்
தினம் தினம் எனைக்கொல்லும்!
எத்தனை எத்தனை மோதல்
என்றாலும் தாளாத காதல்!
உன்னோடு நானிருப்பேன் இவ்வேளை
கனவாய் போனதெல்லாம் மாயை !
இறைவன் மனதில் என்ன உண்டு
காத்திருப்போம் நல்வேளை உண்டு!
நம்பிக்கைதான் வாழ்க்கை
ஏற்றுக்கொள் என் வாழ்த்தை!
அன்புடன்
உடையார்
Filed under: Uncategorized


